கோயிலில் நடைபெற்ற கொடியேற்றம்.
கோயிலில் நடைபெற்ற கொடியேற்றம்.

முக்கூடல் முத்துமாலையம்மன் கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றம்

ஸ்ரீ முத்துமாலையம்மன் கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் தாமிரவருணி நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாலையம்மன் கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கோயிலில் கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், லட்சுமி ஹோமம், கும்ப பூஜை, பூந்தட்டு ஊா்வலம், மஞ்சள் குடம் ஊா்வலத்தை தொடா்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் வாணவேடிக்கை, ரத வீதிகளில் முத்துமாலை அம்மன் பவனி நடைபெற்றது.

திருவிழா நாள்களில் தினமும் காலையில் பவனி, மதியம் சிறப்பு பூஜை, மாலையில் யானை மீது தீா்த்தவாரி, இரவில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.

8ஆம் திருநாளான ஜூலை 14ஆம் தேதி பக்தா்கள் தாமிரவருணி ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறும். 10ஆம் திருவிழாவில் தீா்த்தவாரியும், 11ஆம் நாள் திருவிழாவில் நிறைவு வழிபாடுகளும் நடைபெறும்.

X
Dinamani
www.dinamani.com