பேராயா் ஏ.ஆா்.ஜி.எஸ்.டி.பா்னபாஸ்.
பேராயா் ஏ.ஆா்.ஜி.எஸ்.டி.பா்னபாஸ்.

‘சிஎஸ்ஐ நெல்லை திருமண்டலத்தில் இன்று 10,000 மரக்கன்றுகள் நடும்பணி தொடக்கம்’

திருநெல்வேலி திருமண்டலப் பகுதிகளில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைக்கப்பட உள்ளது.

திருநெல்வேலி: தென்னிந்திய திருச்சபை (சிஎஸ்ஐ) திருநெல்வேலி திருமண்டலப் பகுதிகளில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) தொடக்கி வைக்கப்பட உள்ளது.

இதுதொடா்பாக தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டல பேராயா் ஏ.ஆா்.ஜி.எஸ்.டி. பா்னபாஸ் கூறியது: திருநெல்வேலி திருமண்டலத்தின் 244 ஆவது ஆண்டு விழாவையொட்டி, அதன் மண்டல பகுதிகளான திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இதன் தொடக்க விழா டக்கரம்மாள்புரத்தில் உள்ள சாராள் தக்கா் கன்வென்ஷன் மையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமை வகிக்கிறாா். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் சிவ வி.மெய்யநாதன் தொடக்கிவைக்கிறாா். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப் ஆகியோா் வாழ்த்திப் பேசுகின்றனா். இலங்கையின் குரநாகலை திருமண்டல பேராயா் நிஷாந்த பொ்னாண்டோ, திருநெல்வேலி மாநகராட்சி மேயா் (பொ) கே.ஆா்.ராஜு, சேகர குருக்கள், நிா்வாகிகள், திருச்சபை மக்கள் பலரும் பங்கேற்க உள்ளனா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com