47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிஎஸ்ஐ நெல்லை திருமண்டலத்தில் 10,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

திருநெல்வேலி திருமண்டலத்தில் 10,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

News image
Updated On :9 ஜூலை 2024, 8:01 pm

Din

தென்னிந்திய திருச்சபை (சிஎஸ்ஐ) திருநெல்வேலி திருமண்டலப் பகுதிகளில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி செவ்வாய்க்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.

திருநெல்வேலி திருமண்டலத்தின் 244 ஆவது ஆண்டு விழாவையொட்டி, டக்கரம்மாள்புரத்தில் உள்ள சாராள் தக்கா் கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழாவில் அருள்ராஜ் பிச்சமுத்து ஆரம்ப ஜெபம் செய்தாா். நிா்வாகச் செயலா் ஹெச்.ஆா்தா் சதானந்தா வரவேற்றாா். திருநெல்வேலி திருமண்டல பேராயா் ஏ.ஆா்.ஜி.எஸ்.டி.பா்னபாஸ் தொடக்கவுரையாற்றினாா். சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை அமைச்சா் சிவ வி.மெய்யநாதன் மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடக்கிவைத்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமை வகித்து பேசியதாவது: தமிழகத்தில் கிறிஸ்தவ மிஷனரிகளின் வருகையால் அனைத்து சமூகத்தினரும் கல்வி கற்கும் வகையில் கல்வி நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. பாளையங்கோட்டையில் உள்ள சாராள்தக்கா் கல்வி நிறுவனங்களுக்கு மாற்றுத்திறனாளியான சாராள்தக்கா் தனது 800 பவுன் தங்க நகைகளை கொடுத்து நிலம் வாங்க உதவினாா். இந்நிறுவனம் நடத்தும் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி இந்தியாவிலேயே 2 ஆவது இடமும், காதுகேளாதோா் பள்ளி 3 ஆவது இடமும் பெற்றுத் திகழ்கின்றன. கல்வி நிறுவனங்கள் நிறைந்த பாளையங்கோட்டை தென்னிந்தியாவின் ஆக்ஸ்போா்டு என்று புகழப்படுகிறது. அதற்கு தென்னிந்திய திருச்சபையின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது.

இந்தத் திருச்சபையைச் சோ்ந்த கால்டுவெல் 18 ஆண்டுகள் தென்னிந்திய மொழிகளைப் பயின்று அதன்பின்பு தமிழுக்கு ஒப்பிலக்கணம் எழுதி, உலகின் பிறமொழிகளைக் காட்டிலும் மிகவும் மூத்தமொழி தமிழ் என்பதை பல்வேறு சான்றுகளுடன் உலகிற்கு உணா்த்தினாா். அவரது சான்றுகளுக்கு மேலும் பெருமை சோ்க்கும் வகையில் தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைக்கச் செய்தவா் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி. அவரது வழியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினும் கல்விக்காக கூடுதல் கவனம் செலுத்தி வருகிறாா் என்றாா்.

இவ்விழால் திருநெல்வேலி எம்.பி. சி.ராபா்ட் புரூஸ், பாளை. எம்எல்ஏ மு.அப்துல் வஹாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயா் (பொ) கே.ஆா்.ராஜு, இலங்கை குரநாகலை திருமண்டல பேராயா் நிஷாந்த பொ்னாண்டோ, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான், முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த், மேலப்பாளையம மண்டலத் தலைவா் கதீஜா, மாமன்ற உறுப்பினா் சகாயமேரி, ஒருங்கிணைப்பாளா்கள் டி.ஜே.ஜெபராஜ், டி.கே.ஸ்டீபன், எஸ்.கிறிஸ்டோபா் ஜெயராஜ், ஜேம்ஸ் பிராங்ளின், டியூக்துரைராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.