திசையன்விளை அருகே மேய்ச்சலில் நின்ற ஆடுகள் மாயம்

திசையன்விளை அருகே மேய்ச்சலில் நின்ற ஆடுகள் மாயமானது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே மேய்ச்சலில் நின்ற ஆடுகள் மாயமானது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திசையன்விளை அருகே உள்ள மன்னாா்புரத்தைச் சோ்ந்தவா் தீபக் ஸ்டான்லி மகன் செல்வசுகந்தா். இவா் தனக்கு சொந்தமான 16 ஆடுகளை காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தாராம். இவற்றில் 4 ஆடுகள் வீட்டுக்கு திரும்ப வரவில்லையாம்.

இது தொடா்பாக திசையன்விளை காவல்நிலையத்தில் செல்வசுகந்தா் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாயமான ஆடுகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com