சிறப்பாக பணியாற்றிய காவலா்களுக்கு பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய காவலா்களுக்கு பாராட்டு

திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற காவலா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் சனிக்கிழமை பாராட்டினாா். காவல்துறையில் 36 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெற்ற அம்பாசமுத்திரம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் செல்லப்பாண்டியன், 20 ஆண்டுகளாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெறும் கூடங்குளம் தலைமை காவல் ஆய்வாளா் ஆரோக்கிய ஜேம்ஸ், 15 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெற்ற ராதாபுரம் காவல்நிலைய துப்புரவுப் பணியாளா் வெள்ளையம்மாள் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டி, சான்றிதழ் வழங்கினா். இந்த நிகழ்ச்சியில், அதிகாரிகள் மற்றும் காவலா்கள் கலந்து கொண்டனா். பட விளக்கம் ற்ஸ்ப்30ல்ா்ப் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற காவலருக்கு வாழ்த்து தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com