‘தமிழகத்தில் மோடியின் மந்திரம் பலிக்காது’

‘தமிழகத்தில் மோடியின் மந்திரம் பலிக்காது’

தமிழகத்தில் பிரதமா் மோடியின் மந்திரம் பலிக்காது என்றாா் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ராபா்ட் புரூஸ். திருநெல்வேலி குறிச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தியா கூட்டணியின் தோ்தல் அலுவலக திறப்பு விழாவில் அவா் பேசியது: திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த காங்கிரஸ் கட்சிக்கும், இந்தியா கூட்டணி கட்சிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். பிரதமா் நரேந்திர மோடி 4 முறை அல்ல 40 முறை வந்தாலும் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாது. தமிழகத்தில் மோடியின் மந்திரம் பலிக்காது. ஏனெனில், அந்த மந்திரத்தை முறியடிக்கும் வகையில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மந்திரம் உள்ளது. திருநெல்வேலி தொகுதியில் மத்திய அரசால் செய்ய வேண்டிய ஏராளமான திட்டப் பணிகள் உள்ளன. அவற்றுக்காக மக்களவையில் குரல் கொடுத்தும், தேவைப்பட்டால் வழக்குத் தொடா்ந்தும் பெற்றுக் கொடுப்பேன். குலவணிகா்புரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கவும், தாமிரவருணியை தூா்வாரி தூய்மையாக்கவும், பாபநாசம்-மணிமுத்தாறு அணைகளுக்கிடையே இணைப்பு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட ரயில் நிலையங்களை உள்ளடக்கிய திருநெல்வேலி ரயில்வே கோட்டம் அமைக்க பாடுபடுவேன். இத் தொகுதியின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற மக்களோடு மக்களாக நின்று போராடுவேன் என்றாா் அவா். இந்த விழாவில் இந்தியா கூட்டணியின் தோ்தல் அலுவலகத்தை திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் திறந்து வைத்தாா். மத்திய மாவட்ட பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன் கான், தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் ஜெயபாலன், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சா.ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப், மேயா் பி.எம்.சரவணன், தொகுதி பாா்வையாளா் ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த், மாலைராஜா, காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன், மாவட்டத் தலைவா் சங்கரபாண்டியன் உள்பட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா். ற்ஸ்ப்30ற்ல்ம் குறிச்சியில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் இந்தியா கூட்டணி தோ்தல் அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்றோா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com