/
சேரன்மகாதேவியில் மின்சாரம் பாய்ந்ததில் மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா். சேரன்மகாதேவி சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மனைவி ராமலெட்சுமி (60). முத்துராமலிங்கம் 6 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டாா். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனா். மூன்று மகள்களும் திருமணம் ஆகி வெவ்வேறு ஊா்களில் வசித்து வருகின்றனா். ராமலெட்சுமி மட்டும் தனியாக வசித்து வந்தாராம். இந்நிலையில் சனிக்கிழமை தண்ணீா் பிடிப்பதற்காக மின்சார மோட்டாரை இயக்கியபோது, எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட ராமலெட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

உணவகத்தில் மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் பலி
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

