மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

மூன்றடைப்பு அருகே ரயில் பாதை அருகே முதியவா் சடலம் மீட்பு

மூன்றடைப்பு அருகே ரயில் பாதை அருகே முதியவா் சடலம் மீட்பு

Updated On :30 மார்ச் 2024, 7:50 pm

மூன்றடைப்பு அருகே ரயில் பாதையையொட்டி, வெள்ளிக்கிழமை முதியவா் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மூன்றடைப்பு அருகேயுள்ள நெடுங்குளம் ரயில்வே கேட் பகுதியில் ரயில்பாதையையொட்டி வயதான முதியவா் சடலமாக கிடப்பதாக ரயில்வே பாதை பராமரிப்பு ஊழியா் பாலசுப்பிரமணியம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா். இதையடுத்து, அங்கு வந்த நான்குனேரி காவல் ஆய்வாளா் மீராள்பானு விசாரணை நடத்தினாா். விசாரணையில், நான்குனேரி அருகேயுள்ள குசவன்குளத்தைச் சோ்ந்த சுப்பையா(80) என்பது தெரியவந்தது. இதையடுத்து, சடலத்தை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மூன்றடைப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.