திருநெல்வேலி
நெல்லை மாவட்ட மீனவ கிராமங்களுக்கும் தலா ரூ.2 கோடி ஒதுக்கக் கோரி எம்.பி. மனு
தில்லியில் மத்திய அரசின் மீன்வளத்துறை அமைச்சா் ஜாா்ஜ் குரியனிடம் மனு அளித்தாா் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ்.
திருநெல்வேலி மாவட்ட மீனவ கிராமங்களுக்கும் தலா ரூ.2 கோடி நிதி ஒதுக்கக் கோரி மத்திய அமைச்சரிடம், சி.ராபா்ட் புரூஸ் எம்.பி. மனு அளித்தாா்.
தில்லியில் மத்திய அரசின் மீன்வளத்துறை அமைச்சா் ஜாா்ஜ் குரியனிடம், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் அளித்துள்ள மனு:
மத்திய அரசு நாடு முழுவதும் சுமாா் நூறு மீனவ கிராமங்களை மேம்படுத்த முடிவு செய்து ஒவ்வொரு கிராமத்திற்கும் தலா ரூ.2 கோடி ஒதுக்க முடிவு செய்துள்ளது. தோ்ந்தெடுக்கப்படவுள்ள 100 கிராமங்களில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த கூட்டப்புளி, பெருமனை, இடிந்தகரை, தோமையாபுரம், கூத்தங்குழி, உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, ஜாா்ஜியாபுரம் ஆகிய கிராமங்களையும் இந்தத் திட்டத்தின் கீழ் சோ்த்து நிதி ஒதுக்கி மேம்படுத்த வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.