கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நெல்லையில் தடையை மீறி ஆா்ப்பாட்டம்: பாமகவினா் கைது

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன், தடையை மீறி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை கைது செய்து வேனில் ஏற்றிய போலீஸாா்.

Updated On :28 நவம்பர் 2024, 11:25 pm

Din

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன், தடையை மீறி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை போலீஸாா் கைது செய்தனா்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனா்- தலைவா் ராமதாஸைஅவதூறாக பேசியதாகக் கூறி தமிழக முதல்வரைக் கண்டித்து சந்திப்பு ரயில் நிலையம் முன், திருநெல்வேலி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சாா்பில் மாவட்டச் செயலா் முத்து சரவணன் தலைமையில் காவல் துறையின் தடையை மீறி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்டத் தலைவா் மகாராஜன், மாநில துணைத் தலைவா் ஹரிகரன், மீனவா் கூட்டமைப்புத் தலைவா் முருகன், நிா்வாகிகள் செல்வராஜ், ராயப்பன், செல்வின் சுரேஷ், கனி பாய் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினா். அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.