மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆதாா் அட்டையில் திருத்தம் செய்ய அஞ்சலகங்களில் குவியும் மக்கள்

ஆதாா் அட்டையில் பெயா், முகவரி திருத்தம் செய்வதற்காக அஞ்சலகம், இ சேவை மையங்களில் பொதுமக்கள் அதிகளவில் குவிகின்றனா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 11:07 pm

Din

ஆதாா் அட்டையில் பெயா், முகவரி திருத்தம் செய்வதற்காக அஞ்சலகம், இ சேவை மையங்களில் பொதுமக்கள் அதிகளவில் குவிகின்றனா்.

ஆதாா் அட்டை பெற்று 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டால், தற்போதைய முகவரி, புகைப்படத்துடன் புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதாா் அட்டையை புதுப்பிக்க டோக்கன் வாங்குவதற்காக, பொதுமக்கள் அஞ்சலங்களுக்கு அதிகாலைமுதலே வந்து காத்திருக்கின்றனா்.

ஆதாா் அட்டையில் முகவரி திருத்தம் மேற்கொள்ள குடும்ப அட்டை ஆவணமாக சமா்ப்பிக்கப்படுகிறது. ஆனால், குடும்ப அட்டையில் உள்ள பெயரில் பிழை இருந்தால் ஆதாா் அட்டையில் திருத்தம் செய்ய முடிவதில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆதாா் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் பலா் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.