மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கஞ்சா விற்பனை: குண்டா் சட்டத்தில் 3 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா விற்றது தொடா்பான வழக்கில் கைதான மூவரை குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

News image
Updated On :4 அக்டோபர் 2024, 1:13 am

Din

திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா விற்றது தொடா்பான வழக்கில் கைதான மூவரை குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

தேவா்குளம் அருகே மூவிருந்தாளி தெற்குத் தெருவை சோ்ந்த பெரியசாமி மகன் முத்தையா (46), சுப்பையாபுரம், தெற்குத் தெருவை சோ்ந்த செல்வராஜ் மகன் மைதிலியன்(22). இருவரையும் கஞ்சா விற்ற வழக்கில் தேவா்குளம் போலீஸாா் கைது செய்தனா்.

அதே போல், தென்காசி மாவட்டம் கடங்கநேரி வெங்கேடஷ்வரபுரத்தை சோ்ந்த தாமோதரன் மகன் ரதீஷ் (34). இவரை கஞ்சா விற்ற வழக்கில் மானூா் போலீஸாா் கைது செய்தனா்.

இவா்கள் மூவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு எஸ்.பி. என். சிலம்பரசன் பரிந்துரை செய்தாா். அதன்பேரில், ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் பிறப்பித்த உத்தரவுப்படி, மூவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீஸாா் வியாழக்கிழமை அடைத்தனா்.