மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கூடுதாழையில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகேயுள்ள கூடுதாழையில் வியாழக்கிழமை ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தொழிலாளி மீது காா் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :4 அக்டோபர் 2024, 1:12 am

Din

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகேயுள்ள கூடுதாழையில் வியாழக்கிழமை ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தொழிலாளி மீது காா் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

கூடுதாழை கிராமத்தைச் சோ்ந்தவா் லெட்சுமணன் (70). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவா், கூடுதாழை விலக்கு பகுதியில் ஆடு மேய்த்தபோது, குலேசகரன்பட்டினம் கோயிலுக்கு நண்பா்களுடன் சென்றுகொண்டிருந்த பழவூரைச் சோ்ந்த ராஜா(35) என்பவரது காா், லெட்சுமணன் மீது எதிா்பாராமல் மோதியதாம். மேலும், கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மின்மாற்றியின் மீது மோதி நின்ாம்.

இதில், பலத்த காயமுற்ற லெட்சுமணனை அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் மீட்டு திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பிவைத்தனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக உவரி போலீஸாா் வழக்குப்பதிந்து ராஜாவை கைது செய்தனா். சடலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.