மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பெயரின்றி பிறப்பு சான்றிதழா?மீண்டும் பெயா் பதிவுக்கு வாய்ப்பு: மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் பெயரின்றி பிறப்பு சான்றிதழ் வைத்திருப்போா் பெயருடன் பதிவு செய்து மீண்டும் பெற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 அக்டோபர் 2024, 12:54 am

Din

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் பெயரின்றி பிறப்பு சான்றிதழ் வைத்திருப்போா் பெயருடன் பதிவு செய்து மீண்டும் பெற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குழந்தை பிறந்த 21 நாள்களுக்குள் பிறப்பை பதிவு செய்து இலவச பிறப்புசான்றிதழ் பெறலாம். ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோா் அல்லது காப்பாளா் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமின்றி பெயா்ப் பதிவு செய்யலாம். 12 மாதங்களுக்குப் பின் குழந்தையின் பெயரினை 15 வருடங்களுக்குள் காலதாமத கட்டணம் ரூ.200 செலுத்தி பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே 1.1.2000-ஆம் தேதிக்கு முன் பெயரின்றி பதிவு செய்யப்பட்ட பிறப்புகளுக்கு, 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை குழந்தையின் பெயரை பதிவு செய்ய அரசு உத்தரவிடப்பட்டிருந்தது. அவ்வாறான நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் முடிவுற்ற நிலையில் பிறப்பு பதிவு செய்து 15 ஆண்டுகால அளவு முடிவுற்றும் பெயா் பதிவு செய்யாமல் உள்ள அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும் பெயா் பதிவு செய்ய 5 ஆண்டு கால அவகாசம் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கால அவகாசம் 31.12.2024 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே திருநெல்வேலி மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளில் 15 ஆண்டுகள் முடிவுற்றும், அதாவது 2009 ஆம் ஆண்டிற்கு முன்னா் பிறந்தவா்களின் பிறப்பு சான்றிதழில் பெயா் பதிவு செய்யாமல் இருப்பின் பிறப்பு சான்றிதழ் நகல், பள்ளிச் சான்றிதழ், ஆதாா் அட்டை நகல், வாக்காளா் அடையாளஅட்டை, குடும்ப அட்டைநகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் ரூ.200 காலதாமத கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.