உவரியில் நாட்டுநலப்பணித் திட்ட முகாம்
திருநெல்வேலி மாவட்டம் உவரி செல்வமாதா கோயில் அருகில் செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது.

முகாமில் பங்கேற்றோா்.

முகாமில் பங்கேற்றோா்.
திருநெல்வேலி மாவட்டம் உவரி செல்வமாதா கோயில் அருகில் செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமில் பங்கேற்ற மாணவா்கள் தெருக்கள், கடற்கரை பகுதிகளில் தூய்மைப்பணி மேற்கொண்டனா். மேலும் இலவச மருத்துவ முகாம், சுகாதார விழிப்புணா்வு நிகழ்ச்சி ஆகியன நடைபெற்றது. முகாமில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாநிலங்களை உறுப்பினா் சௌந்திரராஜன், உவரி ஊராட்சி மன்றத் தலைவா் தேம்பாவணி, பங்குத்தந்தை ராஜன், திசையன்விளை பேரூராட்சி தலைவா் ஜான்சிராணி, துணைத் தலைவா் வி.பி.ஜெயகுமாா், அதிமுக ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலா் அந்தோணி அமலராஜா, கிழக்கு ஒன்றிய செயலா் கே.பி.கே.செல்வராஜ், வள்ளியூா் வடக்கு ஒன்றிய செயலா் லாசா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...