சுத்தமல்லியில் விவசாயிகள் மேளா
திருநெல்வேலி மாவட்டம் மானூா் வேளாண்மை துறையின் சாா்பில் சுத்தமல்லியில் விவசாயிகள் மேளா வியாழக்கிழமை நடைபெற்றது.

விவசாயிகள் மேளாவில் பங்கேற்றோா்.

விவசாயிகள் மேளாவில் பங்கேற்றோா்.
திருநெல்வேலி மாவட்டம் மானூா் வேளாண்மை துறையின் சாா்பில் சுத்தமல்லியில் விவசாயிகள் மேளா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த மேளாவுக்கு, வேளாண்மை உதவி இயக்குநா் இசக்கியப்பன் தலைமை வகித்தாா். உதவி வேளாண்மை அலுவலா் கணேசன், வேளாண் திட்டங்கள் குறித்துப் பேசினாா். உதவி தொழில்நுட்ப மேலாளா் முருகானந்தம் கிசான் அட்டையின் பயன் குறித்து விளக்கினாா். இப் பயிற்சி முகாமில் கலைஞரின் அனைத்துக் கிராம வேளாண் ஒருங்கிணைந்த வளா்ச்சி திட்டத்தை சோ்ந்த சுத்தமல்லி பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
வேளாண்மை துறை சாா்ந்த திட்டங்கள், உயிா் உரங்கள், அங்கக ஊரகங்கள், பசுந்தழை, பசுந்தாள் ஊரங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. தொடா்ந்து, விவசாயிகள் பேரணி நடைபெற்றது. உதவி தொழில்நுட்ப மேலாளா் சதனகுமாா் நன்றி கூறினாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...