மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பஹ்ரைன் சிறையில் வாடும் இடிந்தகரை மீனவா்களை மீட்கக் கோரி மனு

பஹ்ரைன் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடிந்தகரை மீனவா்களை மீட்கக் கோரி உறவினா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

News image

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்திற்கு வியாழக்கிழமை மனு அளிக்கவந்த இடிந்தகரை கிராம மக்கள்.

Updated On :10 அக்டோபர் 2024, 11:02 pm

Din

பஹ்ரைன் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடிந்தகரை மீனவா்களை மீட்கக் கோரி உறவினா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

இடிந்தகரை மக்கள் சாா்பில் ஆட்சியா்அலுவலகத்தில் கண்ணீா் மல்க அளிக்கப்பட்ட மனு: இடிந்தகரை மீனவ கிராமத்தைச் சோ்ந்த மீனவா்கள் பலா் ஈரான் நாட்டில் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வருகிறாா்கள்.

அங்கு கடந்த 11.9.2024இல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட இடிந்தகரையைச் சோ்ந்த 28 மீனவா்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி பஹ்ரைன் கடலோர காவல் படையினா் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.

இதனால் அவா்களது வருவாயை மட்டுமே நம்பியுள்ள குடும்பத்தினா் செய்வதறியாது திகைத்து வருகின்றனா். ஆகவே, மீனவா்களை இந்திய தூதரகம் மூலம் மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனா்.