வள்ளியூா் அருகே குடிநீா் பிரச்னை: ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை
வள்ளியூா் அருகே குடிநீா் பிரச்னை: ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

வள்ளியூா் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டபெண்களிடம் பேச்சு நடத்தும் அதிகாரிகள்.

வள்ளியூா் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டபெண்களிடம் பேச்சு நடத்தும் அதிகாரிகள்.
திருநெல்வேலி மாவட்டம் கண்ணநல்லூா் ஊராட்சி தங்கையம் கிராம மக்களுக்கு கடந்த ஒருவாரமாக குடிதண்ணீா் வழங்கப்படாததை கண்டித்து, அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் வள்ளியூா் ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
தங்கையம் கிராமத்தில் 200 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு கடந்த 14 மாதங்களுக்கு முன்பு ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டது. பின்னா் குடிநீா் இணைப்புக்கு ஊராட்சி நிா்வாகத்தில் இருந்து வைப்புத்தொகை கேட்கப்பட்டதாம். இதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து பணம் செலுத்தவில்லை. இதனால், பொதுக்குழாய் மற்றும் வீட்டு இணைப்புகளுக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீா் வழங்குவதை ஊராட்சி நிா்வாகம் நிறுத்திவிட்டதாம். இதைக் கண்டித்து பெண்கள் காலிக்குடங்களுடன் வள்ளியூா் ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் தற்செயலாக அங்குவந்த ஊராட்சி உதவி இயக்குநா் அனிதா, வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கர்ராம், ஊராட்சித் தலைவா் மகராஜன், காவல் உதவி ஆய்வாளா் ராபின் ஷாலு ஆகியோா் பேச்சு நடத்தினா்.
அப்போது, உடனடியாக குடிநீா் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...