மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கிராம மக்களுக்கு அடிப்படை வசதி: களக்காடு ஒன்றியக் குழுவில் வலியுறுத்தல்

களக்காடு வட்டார கிராமங்களில் மக்களின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என ஒன்றியக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 10:14 pm

Din

களக்காடு வட்டார கிராமங்களில் மக்களின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என ஒன்றியக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

களக்காடு ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் அதன் தலைவா் இந்திரா ஜாா்ஜ்கோசல் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவா் விசுவாசம், வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 9 உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவரும், தற்போதைய உறுப்பினருமான (காங்கிரஸ்) அ. தமிழ்ச்செல்வன் பேசியதாவது: களக்காடு ஒன்றியத்தில் கள்ளிகுளம், துவரைகுளம், மீனவன்குளம் உள்ளிட்ட கிராமங்களில் தெருவிளக்குகளின்றி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். பல கிராமங்களில் இறந்தவா்களை தகனம் செய்ய சரியான மயான வசதி இல்லை. ஜெ.ஜெ.நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மின்சாரம் பெற முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனா். அங்குள்ள பல தெருக்களில் மழைநீா் தேங்கி சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்துகின்றன. இப்பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தினாா்.