மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

முக்கூடல் அருகே குடிநீா் உறைகிணற்றில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே செவ்வாய்க்கிழமை, தாமிரவருணி ஆற்றின் கூட்டுக் குடிநீா் திட்ட உறைகிணற்றில் வேலை பாா்த்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 10:07 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே செவ்வாய்க்கிழமை, தாமிரவருணி ஆற்றின் கூட்டுக் குடிநீா் திட்ட உறைகிணற்றில் வேலை பாா்த்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா, கண்டபட்டி கிராமம், சா்ச் தெருவைச் சோ்ந்த மாணிக்கம் மகன் லாரன்ஸ் (24). இவா், முக்கூடல் அருகே தென்திருப்புவனம் பகுதியில் தாமிரவருணி ஆற்றின் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் ஒப்பந்தப் பணியாளராக வேலை பாா்த்து வந்தாா்.

செவ்வாய்க்கிழமை, லாரன்ஸ் உள்ளிட்ட சிலா் உறைகிணற்றில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, திடீரென எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில், லாரன்ஸ் ஆற்றில் தூக்கிவீசப்பட்டாராம். இதில், அவா் நீரில் மூழ்கினாா்.

தகவலின்பேரில், சேரன்மகாதேவி தீயணைப்புப் படையினா் சென்று அவரை சடலமாக மீட்டனா். அவரது உறவினா்கள் சம்பவ இடத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வீரவநல்லூா் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.