திருக்குறுங்குடி பெரியகுளத்தின் கரையில் தடுப்புக் கம்பிகள் அமைக்கக் கோரிக்கை
திருக்குறுங்குடி பெரியகுளத்தின் கிழக்குக் கரைப் பகுதியில் தடுப்புக் கம்பிகள் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On :30 அக்டோபர் 2024, 9:08 pm

திருக்குறுங்குடி பெரியகுளத்தின் கிழக்குக் கரைப் பகுதியில் தடுப்புக் கம்பிகள் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
களக்காட்டிலிருந்து வள்ளியூா் செல்லும் பிரதான சாலையில் திருக்குறுங்குடி பெரியகுளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்தின் கிழக்குக் கரைப் பகுதியில் பாதுகாப்புக் கம்பிகள் அமைக்கப்படவில்லை. இப்பகுதி அதிக போக்குவரத்து நிறைந்ததாகும். எனவே, விபத்து ஏற்படாதவாறு, குளத்தின் கிழக்குக் கரைப் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினா் பாதுகாப்புக் கம்பிகள் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...