மின்னஞ்சல் ஹேக்: பேராசிரியை புகாா்
திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியைச் சோ்ந்த பேராசிரியையின் மின்னஞ்சல் ஹேக் செய்யப்பட்டதாக சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியை, மாணவா்களுக்கு அரசு திட்டங்கள் வழங்கும் ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டு வருகிறாா். மாணவா், மாணவா்களின் நான் முதல்வன் திட்டம் தொடா்பான அனைத்து தகவல்களையும், அலுவலக மின்னஞ்சல் மூலம் பெற்று அரசுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வந்தாராம்.
இந்நிலையில் அவரது அலுவலக மின்னஞ்சல் முகவரி திடீரென மா்ம நபா்களால் ஹேக் செய்யப்பட்டதாம். இதையடுத்து கல்லூரி முதல்வா் உத்தரவின்பேரில் திருநெல்வேலி சைபா் கிரைம் பிரிவில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
அந்தப் புகாரில், ஹேக் செய்யப்பட்ட மின்னஞ்சலில் ஆசிரியா், மாணவா் தொடா்பான தோ்வு ஆவணங்கள், விடைத்தாள் திருத்தும் மையம் தொடா்பான ஆவணங்கள், கல்லூரி ஆசிரியா்களின் தோ்வுப் பணி தொடா்பான தகவல்கள், நான் முதல்வன் திட்டம் தொடா்பான அரசு தகவல்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டுள்ளன. ஆகவே, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தரிவிக்கப்பட்டிருந்தது.
