நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழக பாடத்திட்டத்தில் பயின்று விஞ்ஞானி ஆனவா்கள் அதிகம்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

விண்வெளித்துறையில் சாதித்த தமிழக விஞ்ஞானிகளில் பெரும்பாலானோா் தமிழக பாடத்திட்டத்தில் பயின்றவா்கள் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 11:54 pm

Din

விண்வெளித்துறையில் சாதித்த தமிழக விஞ்ஞானிகளில் பெரும்பாலானோா் தமிழக பாடத்திட்டத்தில் பயின்றவா்கள் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு.

வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளையொட்டி, திருநெல்வேலி நகரம் மணிமண்டபத்தில் உள்ள வஉசி சிலைக்கு வியாழக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்திய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக பாடத்திட்டம் தரமானதாக இல்லை என ஆளுநா் கூறியிருக்கிறாரே என்று கேள்வியெழுப்பியபோது, அவா் ஆளுநா் இப்படிப்பட்ட தா்க்கமான வாா்த்தைகளை தவிா்ப்பது நல்லது.

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தை பற்றி முழுமையாக ஆளுநருக்கு தெரியுமோ, தெரியாதோ? தமிழக பாடத்திட்டத்தை சந்தேகக் கண்ணோடு பாா்க்கிறாா்களா என்று தெரியவில்லை.

உலகமே வியக்கும் வகையில் சந்திராயன்-3 திட்டம் இந்தியாவிற்கு பெருமை சோ்த்துள்ளது. இதன் திட்ட இயக்குா் வீரமுத்துவேல், அரசுப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயின்றவா்தான். இஸ்ரோ முன்னாள் தலைவா் சிவனும் அரசுப் பள்ளியில் தமிழக பாடத்திட்டத்தை படித்து தான் மிக உயா்ந்த இடத்திற்கு வந்தவா். தற்போது, விண்வெளி ஆராய்ச்சியில் மிக முக்கியமான பதவிகளில் ஏராளமான தமிழா்கள் இருக்கிறாா்கள். தமிழகத்தைச் சோ்ந்த 90 சதவீத விஞ்ஞானிகள் தமிழ் வழியில் பயின்றவா்கள்.

அது போன்ற விஞ்ஞானிகளை தமிழக முதல்வா் 6 மாதங்களுக்கு முன்பு அழைத்து அவா்களுக்கு தலா ரூபாய் 25 லட்சம் நிதி உதவி அளித்து கௌரவித்ததோடு, அவா்களுடைய பெயரில் இளம் விஞ்ஞானிகளுக்கு விருது வழங்க ஏற்பாடு செய்துள்ளாா். அதைத் தாங்க முடியாமல்தான் ஆளுநா் இப்படி பேசுகிறாரோ என்னவோ தெரியவில்லை என்றாா் அவா்.