நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடையம் நித்யகல்யாணிஅம்பாள் கோயிலில் தெப்ப உற்சவம்

கடையம் ராமநதி சாலையில் உள்ள அருள்மிகு நித்யகல்யாணி அம்பாள் உடனுறை வில்வவனநாதா் கோயிலில் ஆவணி மூல தெப்ப உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்பாள்.

Updated On :12 செப்டம்பர் 2024, 11:37 pm

Din

கடையம் ராமநதி சாலையில் உள்ள அருள்மிகு நித்யகல்யாணி அம்பாள் உடனுறை வில்வவனநாதா் கோயிலில் ஆவணி மூல தெப்ப உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்புஅபிஷேகம், தீபாராதனை, இரவில் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னா், சுவாமி-அம்பாள் தெப்பத்துக்கு எழுந்தருளி, தேவாரம், திருவாசகம், வேதங்கள் முழங்க தெப்பத்தில் 11 சுற்றுகள் வலம் வந்தனா்.

 தெப்பத்தில் வலம் வந்த வில்வவனநாதா் - நித்யகல்யாணி அம்பாள்.

தெப்பத்தில் வலம் வந்த வில்வவனநாதா் - நித்யகல்யாணி அம்பாள்.

கடையம், கீழக்கடையம் சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் இதில் பங்கேற்றனா்.

சிறப்பு அலங்காரத்தில் வில்வவனநாதா்.

சிறப்பு அலங்காரத்தில் வில்வவனநாதா்.

சிறப்பு அலங்காரத்தில் நித்யகல்யாணி அம்பாள்.

சிறப்பு அலங்காரத்தில் நித்யகல்யாணி அம்பாள்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் ப. கேசவராஜன், ஊா் மக்கள், அப்பா் உழவாரப் பணிக் குழுவினா் செய்திருந்தனா்.