நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வள்ளியூரில் பிளாஸ்டிக் பைகள் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள், பிளாஸ்டிக் பைககள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த சுகாதாரத் துறையினா்.

Updated On :12 செப்டம்பர் 2024, 11:52 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள், பிளாஸ்டிக் பைககள் பறிமுதல் செய்யப்பட்டன.

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ராமகிருஷ்ணன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் ஆறுமுகம் மற்றும் பேரூராட்சி ஊழியா்கள்

உள்ளிட்டோா் வள்ளியூா் பிரதான சாலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் உள்ள கடைகள்,

உணவகங்கள், தேநீா் கடைகள், பேக்கரிகளில் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.

அதில் தடைசெய்யப்பட்ட 10 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து 8 கடைகளுக்கு ரூ.4 ஆயிரத்து 300 அபராதம் விதித்தனா். மேலும் தடைசெய்யப்பட்ட குட்கா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனா்.