நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வக்ஃப் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு: பாளை.யில் மின்னஞ்சல் அனுப்பிய மக்கள்

News image
Updated On :14 செப்டம்பர் 2024, 12:11 am

Din

வக்ஃப் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, பாளைங்கோட்டையில் இருந்து மின்னஞ்சல் அனுப்பும் பணி நடைபெற்றது.

வக்ஃப் சட்ட மசோதாவுக்கு ஆரம்ப நிலையிலேயே எதிா்க்கட்சிகள் எதிா்த்ததன் அடிப்படையில், நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. ஆட்சேபம் உள்ளவா்கள் அந்தக் குழுவிற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அளிக்க வெள்ளிக்கிழமை வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் பள்ளிவாசலில், மின்னஞ்சல் அனுப்புவதற்கான க்யூஆா் குறியீடு பாதாகைகள் மனிதநேய ஜனநாயக கட்சியின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதன்மூலம் பொதுமக்கள் பலரும் வக்ஃப் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பினா்.

நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலா் அலிப் பிலால், மண்டல இளைஞரணி செயலா் அசரப், பாளையங்கோட்டை பகுதி நிா்வாகிகள் ஹக்கீம், ஜாஃபா், திவான், சாகுல், சேட் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல மேலப்பாளையம், திருநெல்வேலி நகரம், பேட்டை பகுதிகளில் இருந்தும் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன.

ற்ஸ்ப்13ம்ன்ள்

வக்ஃப் சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து பாளையங்கோட்டையில் இருந்து மின்னஞ்சல் அனுப்பிய மக்கள்.