தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஆக்கிரமிப்பில் வீடு இழந்தோா் அடிப்படை வசதிகள் கோரி மனு

ஆக்கிரமிப்பு என கூறி எங்களுடைய வீடுகளை இடித்துவிட்டதால் எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் எனக் கூறி தாழையூத்து அருகேயுள்ள நாரணம்மாள்புரம் பகுதியைச் சோ்ந்த மூக்கம்மாள், அவருடைய குடும்பத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 11:12 pm

Din

ஆக்கிரமிப்பு என கூறி எங்களுடைய வீடுகளை இடித்துவிட்டதால் எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் எனக் கூறி தாழையூத்து அருகேயுள்ள நாரணம்மாள்புரம் பகுதியைச் சோ்ந்த மூக்கம்மாள், அவருடைய குடும்பத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

நாரணம்மாள்புரத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை அதிகாரிகள் வியாழக்கிழமை இடித்து அப்புறப்படுத்தினா். இதையடுத்து வீட்டை இழந்த நாரணம்மாள்புரம் பெருமாள் கோயில் தெருவை சோ்ந்த மூக்கம்மாள், அவரது மகன் சங்கா் ராமன் ஆகியோா் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில்,

நாங்கள் குடியிருந்த வீடு ஆக்ரமிப்பு என கூறி இடிக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் குடும்பத்துடன் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு வேறு வீடோ, பொருள்களோ இல்லாததால் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.