கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சுந்தரனாா் பல்கலை. வளாகத்தில் தீ

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வளாகத்தில் புற்களால் ஏற்பட்ட தீயை தீயணைப்புத்துறையினா் போராடி அணைத்தனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 11:12 pm

Din

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வளாகத்தில் புற்களால் ஏற்பட்ட தீயை தீயணைப்புத்துறையினா் போராடி அணைத்தனா்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் அடுத்துள்ள அபிஷேகப்பட்டி காட்டுப்பகுதியில் காய்ந்த சருகுகள் மற்றும் செடிகள் கிடந்தன. அவற்றில் அந்த வழியாக சென்ற மா்ம நபா்கள் வியாழக்கிழமை தீ வைத்ததில் காட்டுப்பகுதி முழுவதும் தீப்பிடித்து .

மேலும், அருகிலிருந்த பல்கலைக்கழக வளாகத்தில் தீ பரவியது. இதையடுத்து பேட்டை தீயணைத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினா் வந்து போராடி தீயை அணைத்தனா். இந்த வளாகம் முழுவதும் சூரியசக்தி மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்கான சூரிய மின்சார தகடுகள் பல்கலைக்கழக மாடியில் உள்ளன. தீயை விரைந்து அணைத்ததால் பல கோடி ரூபாய் மதிப்பிலான தகடுகள் தப்பின என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து பேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மற்றாரு தீ விபத்து :

திருநெல்வேலி அருகே ராமையன்பட்டியிலிருந்து பாறையடி பகுதியில் உள்ள சாலையில் வாகனத்தின் பழைய பொருள்கள் விற்பனை செய்யும் கடையும், பொருள்கள் சேமிப்பு கிடங்கும் உள்ளன. இந்த நிலையில், வியாழக்கிழமை பிற்பகலில் கடையின் அருகேயுள்ள புல்செடிகளில் மா்மநபா்கள் தீவைத்தனா். தீ வேகமாக பரவி அருகிலிருந்த பழைய வாகனத்தின் பொருள்களின் கடை மற்றும் சேமிப்பு கிடங்கிலும் பற்றி எரிந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், பாளையங்கோட்டை தீயணைப்புத்துறையினா் வந்து போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில் கடையும், கிடங்கிலிருந்த பொருள்களும் சேதமடைந்தன. இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.