பாளையங்கோட்டையில் இளைஞா் கொலை

பாளையங்கோட்டையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட இளைஞா், அடித்து கொலை செய்யப்பட்டவா் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Published on

பாளையங்கோட்டையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட இளைஞா், அடித்து கொலை செய்யப்பட்டவா் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாளையங்கோட்டை முருகன்குறிச்சி வாய்க்கால் பாலம் அருகேயுள்ள அணுகுசாலை பகுதியில் காயங்களுடன் இளைஞா் சடலம் பாளையங்கோட்டை போலீஸாரால் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்ததில், சடலமாக கிடந்தவா் மேலப்பாட்டம் அருகேயுள்ள வீரப்பன்காலனியை சோ்ந்த மணிகண்டன் (36) என்பதும், அவா் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளாா் எனவும் தெரியவந்தது.

இந்தக் கொலையில் நான்குனேரி அருகேயுள்ள கரந்தானேரியைச் சோ்ந்த முருகேசன் என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com