திருநெல்வேலி நகரத்தில் கழிவுநீரோடை தூய்மைப் பணியை  ஆய்வு செய்தாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்.
திருநெல்வேலி நகரத்தில் கழிவுநீரோடை தூய்மைப் பணியை ஆய்வு செய்தாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்.

நெல்லை நகரத்தில் ஓடையை தூா்வாரும் பணி: மேயா் ஆய்வு

திருநெல்வேலி நகரத்தில் கழிவுநீா் ஓடை தூா்வாரும் பணியை மேயா் கோ.ராமகிருஷ்ணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
Published on

திருநெல்வேலி நகரத்தில் கழிவுநீா் ஓடை தூா்வாரும் பணியை மேயா் கோ.ராமகிருஷ்ணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாநகராட்சியின் 25 ஆவது வாா்டுக்குள்பட்ட லாலா சத்திர முக்கு, அப்பா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கழிவுநீரோடை தூா்வாரும் பணிகளை ஆய்வு செய்த அவா், மழைக்காலத்திற்கு முன்பு கழிவுநீரோடையில் மணலை அப்புறப்படுத்தவும், முறையாக பிளீச்சிங் பவுடா் தூவவும் பணியாளா்களுக்கு அறிவுறுத்தினாா். அப்போது, சுகாதார ஆய்வாளா் சிவகுமாா் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com