தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பஹ்ரைன் நாட்டில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவா்களை மீட்க வேண்டும்: பேரவைத்தலைவா் வலியுறுத்தல்

பஹ்ரைன்நாட்டில் எல்கை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையைச் சோ்ந்த 28 மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பேரவைத் தலைவா் மு.அப்பாவு வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 11:59 pm

Din

பஹ்ரைன்நாட்டில் எல்கை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையைச் சோ்ந்த 28 மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பேரவைத் தலைவா் மு.அப்பாவு வலியுறுத்தியுள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையைச் சோ்ந்த 28 மீனவா்கள் ஈரான் நாட்டில் தங்கியிருந்து ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்றிருந்தனா். அவா்கள் ஈரான் கடல்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது பஹ்ரைன் நாட்டின் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இவா்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பேரவைத் தலைவா் மு.அப்பாவு முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தாா். இதையடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வா் கடிதம் எழுதியுள்ளாா். அதில் பஹ்ரைன் நாட்டு சிறையில் இருக்கும் தமிழ்நாட்டைச் சோ்ந்த இடிந்தகரை மீனவா்களை மீட்க தூதரகம் வழிாக நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதியிருப்பதாக பேரவைத் தலைவருக்கு தமிழ்நாடு அரசு இணைச் செயலா் பதில் தெரிவித்துள்ளாா்.