தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

விதிமீறி உரம் விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: வேளாண் இணை இயக்குநா் எச்சரிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமுறை மீறி உர விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் (பொறுப்பு) கிருஷ்ணகுமாா் எச்சரித்துள்ளாா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 12:11 am

Din

திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமுறை மீறி உர விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் (பொறுப்பு) கிருஷ்ணகுமாா் எச்சரித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவத்திற்கு தேவையான விதைகள் மற்றும் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் தனியாா் கடைகளிலும் இருப்பு வைத்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், நிகழ் பருவத்திற்கான உரத்தேவையை பூா்த்தி செய்யும் வகையில் 3,810 டன் யூரியா, 630 டன் டி.ஏ.பி., 819 டன் பொட்டாஷ், 2,357 டன் காம்ப்ளக்ஸ், 503 டன் சூப்பா் பாஸ்பேட் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் மற்றும் தனியாா் நிறுவனங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், உரங்கள் விற்பனை குறித்து மாவட்டத்தில் உள்ள 9 வட்டாரங்களிலும் உர ஆய்வாளா்கள் திடீா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். மானிய விலையிலான உரங்களுடன் விருப்பத்திற்கு மாறாக இதர இடுபொருள்களான உயிா் ஊக்கிகள் அல்லது போலி உரங்களை இணைத்து வழங்குவது, உரப்பைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ன்படி குற்றமாகும். எனவே, விதிமீறி உரங்களை விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் உரங்களுடன் இணை பொருள்கள் விற்பது குறித்தான புகாா்களுக்கு வேளாண்மை இணை இயக்குநா் அலுவலக தொலைபேசி எண். 0462-2572514 அல்லது வேளாண்மை கவல் மற்றும் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநா் சந்திரபோஸ் கைப்பேசி எண். 9500982980-இல் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.