திருநெல்வேலி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு ஏப்ரல் 11 அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.
பங்குனி உத்திர திருநாள் (பங்குனி -28) 11.04.2025 வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அரசு பொதுத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் அறிவிக்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதும் இருந்தால் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. மேலும் கருவூலம், அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஏப்ரல் 26 அன்று அதாவது 4-வது சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. அந்த சமயத்தில் கோடை விடுமுறையில் உள்ள கல்வி நிறுவன மாணவ மாணவியருக்கு இவ்வேலை நாள் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வல்லக்கோட்டை கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்

சிதம்பரத்தில் சுப்ரமணியர் தேரோட்டம்!

வாக்குப்பதிவு அன்று ஊதியத்துடன் விடுமுறை: அஸ்ஸாம் அரசு!

தென்காசியைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்திற்கும் ஏப்ரல் 1 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


