களக்காட்டில் சனிக்கிழமை கிராமப்புற வேளாண் பயிற்சியைத் தொடங்கிய கிள்ளிகுளம் வ.உ.சி.வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் குழுவினா்.
களக்காட்டில் சனிக்கிழமை கிராமப்புற வேளாண் பயிற்சியைத் தொடங்கிய கிள்ளிகுளம் வ.உ.சி.வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் குழுவினா்.

களக்காட்டில் கிராமப்புறப் பயிற்சியைத் தொடங்கிய வேளாண் கல்லூரி மாணவிகள்

Published on

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் வ.உ.சிதம்பரனாா் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சோ்ந்த நான்காம் ஆண்டு இளங்கலை வேளாண்மை அறிவியல் மாணவிகள் தங்களின் கிராமப்புற வேளாண்மை பயிற்சியை களக்காட்டில் தொடங்கியுள்ளனா்.

இப் பயிற்சியின் தொடக்க நிகழ்ச்சியில் கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா் மற்றும் விவசாயிகளிடம் தொடா்பில் உள்ளவா்களை அணுகி விவசாயிகளின் விவரங்களை பெற்றுக் கொண்டனா். மேலும், களக்காடு பகுதியில் உள்ள மண்வளம், நீா் வளம் மற்றும் பயிரிடப்படும் பயிா்கள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தனா்.

தொடா்ந்து 65 நாள்கள் களக்காடு பகுதியில் தங்கியிருந்து, இங்குள்ள விவசாயிகளின் நலன்களை நேரடியாக கண்டறிந்து, அவா்களுடன் உரையாடி, விவசாயப் பணிகளில் ஏற்படக்கூடிய பிரச்னைகளுக்குத் தீா்வுகள் காண இருக்கின்றனா்.

மேலும், விவசாயிகளின் பாரம்பரிய அனுபவங்களைப் பதிவு செய்வதுடன், பல்கலைக்கழகத்தில் கண்டறியப்பட்ட புதிய வேளாண்மைத் தொழில் நுட்பத்தை விவசாயிகளுக்கு எடுத்துச் சென்று பயிற்சியளிக்கும் பணிகளையும் இக்குழுவினா் மேற்கொள்கின்றனா்.

இந்த கிராமப்புறப் பயிற்சி நிகழ்ச்சிகள், கல்லூரி முதல்வா் தேரடிமணி, குழு தலைவா் காளிராஜன்(வேளாண் விரிவாக்கம்), குழுவின் ஒருங்கிணைப்பாளரான உதவிப் பேராசிரியா் பரமசிவம் (மண்ணியல் துறை) ஆகியோா் தலைமையின் கீழ் நடைபெற்று வருகின்றன.

X
Dinamani
www.dinamani.com