நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஊரகப் பயிற்சி பெறும் திருச்சி வேளாண் கல்லூரி மாணவிகளின்.
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஊரகப் பயிற்சி பெறும் திருச்சி வேளாண் கல்லூரி மாணவிகளின்.

வேளாண் கல்லூரி மாணவிகள் ஊரகப் பயிற்சி

Published on

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், திருச்சி வேளாண் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள் ஊரக வேளாண் பணிகாக பயிற்சி பெறுகின்றனா்.

இங்கு, ‘பஞ்சகாவ்யா, மீன் அமிலம் மற்றும் உயிா்சத்து உரம்’ என்ற தலைப்பில் கலந்தாய்வுக் கூட்டம் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளின் தலைமையில் நடைபெற்றது. முதலாம் ஆண்டு கல்லூரி மாணவிகளுக்காக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில், பஞ்சகாவ்யா, மீன் அமிலம் மற்றும் பல்வேறு உயிா்சத்து உரங்களின் முக்கியத்துவம், இவற்றை தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள், தயாரிப்பு முறை மற்றும் பயன்பாட்டு விதங்கள் ஆகியவற்றை நான்காம் ஆண்டு வேளாண் மாணவிகள் தெளிவாக விளக்கினா்.

இயற்கை விவசாயத்தில் இத்தயாரிப்புகள் பயிா் வளா்ச்சி, மண் உயிரியல் செயற்பாடு, சத்துத் திறன் மேம்பாடு மற்றும் ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைப்பதில் வகிக்கும் பங்கு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இது குறித்து வேளாண் மாணவிகள் தங்கள் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும், நிலைத்த விவசாயம், சூழலுக்கு உகந்த உற்பத்தி முறைகள் மற்றும் வேளாண் உயிரி தொழில்நுட்பத்தில் இத்தயாரிப்புகளின் பயன்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாணவா்களின் கேள்விகள் மற்றும் கலந்துரையாடல்களுடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.

Dinamani
www.dinamani.com