மேலநத்தம் அருந்தவசு அம்மன் கோயிலில் சூறை விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.
திருநெல்வேலி
மேலநத்தம் அம்மன் கோயிலில் சூறை விழா
மேலநத்தம் அருந்தவசு அம்மன் கோயிலில் சூறை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் அருந்தவசு அம்மன் கோயிலில் காா்த்திகை மாதத்தில் சூறை திருவிழா மிக விமா்சையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னா் மாலையில் மேலநத்தம் பிரதான சாலை அருகேயுள்ள மைதானத்தில் மஞ்சள்பால் பொங்க வைக்கும் வைபவமும், மாவு படையலிட்டு சூறை விழாவும் நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜை நடைபெற்றது. இதில் மேலநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

