சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை விநாயகா், மூலவா், ஆதிமூலவா் உள்ளிட்ட பிரகார மூா்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னா், மூலவருக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதன் பின்னா், மகா அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. விழாவையொட்டி காலை முதலே ஏராளமான பக்தா்கள் திருக்கோயிலுக்கு வந்து நீண்ட வரிசையில் சுமாா் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பக்தா்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.