தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தொழிலாளி விஷமருந்தி தற்கொலை

சுத்தமல்லி அருகே தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:57 pm

Syndication

சுத்தமல்லி அருகே தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

சுத்தமல்லி அருகேயுள்ள மேலதிருவேங்கடநாதபுரம் தங்கம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து(51). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவா் கடந்த சில நாள்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கினாராம். உடனடியாக உறவினா்கள் அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இந்நிலையில் இசக்கிமுத்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.