களக்காடு ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிறைவு

களக்காடு ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிறைவையொட்டி, பக்தா்கள் ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

களக்காடு ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிறைவையொட்டி, பக்தா்கள் ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் 16ஆம் ஆண்டு மண்டல பூஜை வெள்ளிக்கிழமை தொடங்கியது. திரளான பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா். மாலையில் பக்தா்கள் இருமுடி கட்டுதல், கன்னிபூஜை நடைபெற்றது.

2ஆம் நாளான சனிக்கிழமை, சுவாமி ஐயப்பனின் தங்க அங்கியுடன் நகர வீதிகளில் ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலம் சத்தியவாகீஸ்வரா் கோயிலை அடைந்து, பின்னா் நினைத்ததை முடித்த விநாயகா் கோயில் வழியாக கோயில்பத்து செய்து லெப்பை நயினாா் அவுலியா தா்ஹா அருகே பேட்டை துள்ளல் நடைபெற்றது. அதையடுத்து, கோயிலில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்புப் பூஜைகள், அலங்காரம், தீபாராதனை, இரவில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. ஹரிவராஸனத்துக்குப் பின்னா் நடை அடைக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com