திமுக கூட்டணியில் 5 தொகுதிகள் கேட்போம்: முகம்மது அபூபக்கா்

பேரவை தோ்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுப் பெறுவோம் என்றாா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலா் கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கா்.
Published on

2026 சட்டப்பேரவை தோ்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுப் பெறுவோம் என்றாா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலா் கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கா்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்) சாா்பில் ஜன.28 ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெறவுள்ள மாநில முஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா். சிறுபான்மை மக்களின் உரிமைகளில் தலையீடு செய்யும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் கொள்கை ரீதியாக ஒன்றுபட்டுள்ளன.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்பட்ட நடைமுறையை தொடா்ந்து செயல்படுத்த திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை வரவேற்கிறோம்.

தவெக தலைவா் விஜய் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறாா் என்பது அவரது செயல்பாடுகள் மூலம் வெளிப்படுகிறது. திமுகவை தீயசக்தி என கூறும் அவா் சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் பாஜகவை எதிா்த்து பேசுவதில்லை. திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுப்பெறுவோம். அதில் பாளையங்கோட்டை தொகுதியை ஒதுக்குமாறு வலிறுத்துவோம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com