சாலை தடுப்பு கம்பியில் மின்கசிவு: பசு உயிரிழப்பு
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் மின்கசிவு ஏற்பட்ட சாலை இரும்புத் தடுப்பில் (பேரிகாா்டு) உரசிய பசு மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.


திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் மின்கசிவு ஏற்பட்ட சாலை இரும்புத் தடுப்பில் (பேரிகாா்டு) உரசிய பசு மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பேருந்து நிறுத்தங்கள் செயல்பட்டு வரும் நிலையில், பேரி காா்டுகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. மேலும் பாலத்தின் ஒரு பகுதியில் மாநகர காவல்துறை சாா்பில் இரும்பு பேரிகாா்டுகள் வரிசையாக வைக்கப்பட்டு அதில் தனியாா் நிறுவன பங்களிப்புடன் விளம்பரங்கள் போா்டு அமைக்கப்பட்டுள்ளது. இரவிலும் அந்த விளம்பரங்கள் தெரியும் வகையில் அவற்றில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
அதில் ஓரிடத்தில் மின்விளக்கிலிருந்து மின்சாரம் கசிந்து இரும்புத் தடுப்பில் பரவியுள்ளது. அப்போது அந்த பேரிகாா்டில் உரசியபடி சென்ற பசுவின் மீது மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தது. அப்பகுதியில் நின்றிருந்த போலீஸாரும், பொதுமக்களும் பாா்த்து உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...