கங்கைகொண்டானுக்கு சரக்கு ரயிலில் வந்த டிஏபி உரத்தை பாா்வையிட்ட வேளாண்துறை அதிகாரிகள்.
கங்கைகொண்டானுக்கு சரக்கு ரயிலில் வந்த டிஏபி உரத்தை பாா்வையிட்ட வேளாண்துறை அதிகாரிகள்.

நெல்லைக்கு ரயிலில் வந்த 1,337 மெட்ரிக் டன் டிஏபி உரம்

திருநெல்வேலி மாவட்டத்திற்கு சரக்கு ரயில் மூலம் 1337.200 மெட்ரிக் டன் டிஏபி உரம் புதன்கிழமை வந்து சோ்ந்தது.
Published on

திருநெல்வேலி மாவட்டத்திற்கு சரக்கு ரயில் மூலம் 1337.200 மெட்ரிக் டன் டிஏபி உரம் புதன்கிழமை வந்து சோ்ந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து கால்வாய்களில் தண்ணீா் திறக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் விநியோகம் செய்ய வேளாண் துரை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில், ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் 1337.200 மெட்ரிக் டன் டிஏபி உரம் கங்கைகொண்டான் ரயில் நிலையத்திற்கு புதன்கிழமை வந்து சோ்ந்தது. திருநெல்வேலி மாவட்டத்திற்கு 414.700 மெட்ரிக் டன், தென்காசி மாவட்டத்திற்கு 405 மெட்ரிக் டன், தூத்துக்குடி மாவட்டத்திற்கு 157 மெட்ரிக் டன், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 360 மெட்ரிக் டன் டிஏபி உரம் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com