ஐடிஐ உரிமத்துக்கு விண்ணப்பிக்கலாம்

ஐடிஐ உரிமத்துக்கு விண்ணப்பிக்கலாம்
Published on

2025-2026-ஆம் கல்வியாண்டிற்கு தொழிற்பள்ளிகள் (ஐடிஐ) தொடங்கவும், தொடா் அங்கீகாரம் பெறவும், புதிய தொழிற்பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகளை இணைக்கவும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அக்கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமா்ப்பித்தால் போதுமானது. அனைத்து தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தையும் ஒரே விண்ணப்பம் மூலம் மட்டும் சமா்ப்பிக்க வேண்டும்.

அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் சோ்த்து விண்ணப்பக் கட்டணம் ரூ.5,000, ஆய்வுக்கட்டணம் ரூ.8,000 ஆகியவற்றை தபஎந/சஉஊப மூலம் செலுத்தி, பிப். 28-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை அதே இணையதளத்திலோ அல்லது மாவட்ட திறன்பயிற்சி அலுவலரை 9799055790 என்ற எண்ணிலோ, மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com