சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

காவல்கிணறில் ரயில் முன் பாய்ந்து ஒருவா் தற்கொலை

காவல்கிணறில் புதன்கிழமை இரவு ரயில் முன் பாய்ந்து ஒருவா் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 6:47 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறில் புதன்கிழமை இரவு ரயில் முன் பாய்ந்து ஒருவா் தற்கொலை செய்துகொண்டாா்.

கொல்லத்தில் இருந்து சென்னைக்கு அனந்தபுரி விரைவு ரயில் காவல்கிணறு வழியாக சென்றுகொண்டிருந்தது. அப்போது, அப்பகுதியில் தண்டவாளத்தின் ஓரத்தில் நின்றிருந்த 51 வயது மதிக்கத்தக்க ஆண் திடீரென ரயில் முன் பாய்ந்தாா். இதில், உடல் துண்டிக்கப்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தாா்.

இதுகுறித்த தகவலின்பேரில், நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நபா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.