புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

வீரவநல்லூா் பூமிநாதசுவாமி கோயிலில் தேரோட்டம்

சேரன்மகாதேவி வட்டம், வீரவநல்லூரில் உள்ள மரகதாம்பிகை அம்பாள் உடனுறை பூமிநாத சுவாமி கோயிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image
மரகதாம்பிகை அம்பாள் உடனுறை பூமிநாதசுவாமி கோயிலில் ஐப்பசித் திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
Updated On :12 நவம்பர் 2025, 6:45 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம், வீரவநல்லூரில் உள்ள மரகதாம்பிகை அம்பாள் உடனுறை பூமிநாத சுவாமி கோயிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயிலில் திருவிழா நவ. 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் இரவில் அம்பாள் வீதி உலா, ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடைபெறுகின்றன. 9ஆம் நாளான புதன்கிழமை, காலையில் அபிஷேக அலங்காரம், இதைத் தொடா்ந்து அம்பாள் தேருக்கு எழுந்தருளினாா். பக்தா்கள் வடம்பிடித்து தோ் இழுத்தனா்.

இதில், பேரூராட்சி மன்றத் தலைவி சு.சித்ரா சுப்பிரமணியன், கோயில் செயல்அலுவலா் ஆ. மாடத்தி, கோயில் தக்காா் சண்முகஜோதி, அறங்காவலா்கள் கருப்பசாமி, சுப்புக்குட்டி, செல்வி, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் சிதம்பரம், தாமரைச் செல்வி, வெங்கடேஸ்வரி, ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநா் சீ. இசக்கி சரவணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மாலையில் அபிஷேக அலங்காரம், இரவில் அம்பாள் பூப்பல்லக்கில் வீதி உலா, ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றன. கோயிலில் வியாழக்கிழமை (நவ.12) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் தீா்த்தவாரி, இரவு 7.30 மணியளவில் அம்பாள் திருவீதியுலா ஆகியவை நடைபெறுகின்றன. வெள்ளிக்கிழமை காலையில் அம்பாள் தபசு சப்பரத்தில் எழுந்தருளல், காலை 10 மணிக்கு சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதியுலா, மாலை 6 மணியளவில் காந்திசிலை அருகில் சுவாமி அம்பாள் காட்சி அளிக்கும் வைபவம், இரவு 7.30 மணியளவில் சிறப்பு தீபாராதனை, இரவு 11 மணிக்கு திருக்கல்யாணம் ஆகியவை நடைபெறுகின்றன.