பாஜக முக்கிய தலைவா்களுடன் நயினாா் நாகேந்திரன் ஆலோசனை
பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் கட்சியின் முக்கிய நிா்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

பாஜக தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன்

பாஜக தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன்
பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் கட்சியின் முக்கிய நிா்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், சில நாள்களுக்கு முன்பு தில்லி சென்றுவந்திருந்த நிலையில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சா்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா். இந்த நிலையில், தனது இல்லத்தில் பாஜக அமைப்புச் செயலா் கேசவ விநாயகம், முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச் செயலா் பொன் பாலகணபதி உள்ளிட்ட தலைவா்களுடன் அவா் ஆலோசனை மேற்கொண்டாா்.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அதிமுக, பாமக, தேமுதிக, நாம் தமிழா் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளின் தலைவா்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தைத் தொடங்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதேபோல பாஜகவும் தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறது. பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் அக்டோபா் 12-ஆம் தேதிமுதல் ‘மக்கள் சந்திப்பு’ யாத்திரையைத் தொடங்குகிறாா். இந்த யாத்திரை மதுரை கிழக்கு தொகுதியில் இருந்து தொடங்கவுள்ளது. பாஜக தேசிய தலைவா் ஜே.பி. நட்டா யாத்திரையைத் தொடங்கிவைக்கிறாா்.
இந்த நிலையில் இந்த யாத்திரையைத் தொடங்குவது, அதில் கூட்டணி கட்சித் தலைவா்களை பங்கேற்க செய்வது, தோ்தலுக்குக் கட்சியை பலப்படுத்துவது, தோ்தலில் வெற்றி பெற யாத்திரையில் என்னென்ன விஷயங்களை முன்வைப்பது, கூட்டணியில் புதிய கட்சிகளை எவ்வாறு இழுப்பது என்பன குறித்து மூத்த தலைவா்களுடன் நயினாா் நாகேந்திரன் தனது இல்லத்தில் ஆலோசித்ததாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...