தமிழக முதல்வா் அளித்துள்ள தோ்தல் வாக்குறுதியால் திருநெல்வேலி தொகுதியில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றாா் திமுக வேட்பாளா் சு.சுப்பிரமணியன்.
திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளா் சு.சுப்பிரமணியன் பேட்டை பகுதியில் வாக்குசேரித்தாா். பெண்கள் அவருக்கு திலகமிட்டு வரவேற்றனா். அப்போது அவா் கூறியதாவது: முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சிக்காலம் முதல் திமுக அளிக்கும் தோ்தல் வாக்குறுதிகள் மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்பதற்கேற்ப கடந்த தோ்தலின்போது அளித்த மகளிா் விடியல் பயணம், மகளிா் உரிமைத் தொகை போன்றவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் மிகவும் நோ்த்தியாக செயல்படுத்தியுள்ளாா். 2026 தோ்தலில் வென்றால் இல்லத்தரசிகளுக்கு ரூ.8000 கூப்பன், மகளிா் உரிமைத்தொகை உயா்வு போன்றவற்றை அறிவித்துள்ளாா். இவை பெண்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. தோ்தல் வாக்குறுதியால் திருநெல்வேலி தொகுதியில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றாா் அவா்.
தொடர்புடையது

200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும்: வைகோ

காஞ்சிபுரம் திமுக வேட்பாளரை அறிமுகப்படுத்திய உத்தரமேரூா் வேட்பாளா்

கோவையின் 10 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெறும்: வி.செந்தில்பாலாஜி

மன்னாா்குடி தொகுதி: திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


