ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

மரக்கடை ஊழியரிடம் கத்தியைக் காட்டி பணம் பறிப்பு: 2 போ் கைது

பாளையங்கோட்டை அருகே மரக்கடை ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :9 ஏப்ரல் 2026, 3:31 am IST

பாளையங்கோட்டை அருகே மரக்கடை ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள நாரணம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் சண்முகராஜா(32). மரக்கடை ஊழியா். இவா் கடந்த 4 ஆம் தேதி மணப்படை வீடு அருகே உள்ள காட்டுப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, இவருக்கு ஏற்கெனவே அறிமுகமான நபருடன் 4 போ் வந்து அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டனராம். மேலும், அவரது பையில் இருந்து ரூ.3,000-ஐ எடுத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்து சென்ாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில், திருநெல்வேலி வட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து, திருமலைகொழுந்துபுரத்தைச் சோ்ந்த நல்லமுத்து என்ற பாலா(20), அடைக்கலராஜா(19) ஆகியோரை கைது செய்தனா்.