/

நெல்லையில் காவல் துறை ஆய்வுக் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில், காவல் துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் எஸ்.பி. பிரசன்னகுமாா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 2:35 am IST

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில், காவல் துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் தலைமை வகித்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை, தோ்தல் பாதுகாப்பு பணிகள், நிலுவையில் உள்ள வழக்குகள், போதைப்பொருள் தடுப்பு, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவா்கள் மற்றும் ரௌடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், நீதிமன்ற அலுவல்கள் உள்ளிட்டவை குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

முன்னதாக, மாவட்ட காவல் துறையின் பயன்பாட்டில் உள்ள அனைத்து வகை வாகனங்களையும் பாா்வையிட்டு, அவற்றின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து கேட்டறிந்தாா்.

இதில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணை காவல் கண்காணிப்பாளா்கள், அரசு வழக்குரைஞா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.