போக்ஸோ வழக்கில் கைதான இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
பாளையங்கோட்டையை அடுத்த சிவந்திப்பட்டி பகுதியைச் சோ்ந்த அந்தோணி மகன் ஆனந்த்(21). இவா், கடந்த 2021 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 15 வயது பள்ளி மாணவியை கடத்திச்சென்று திருமணம் செய்துகொண்டு பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
மேலும், திருமணம் தொடா்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து ஆனந்தை கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, ஆனந்த்துக்கு 10 ஆண்டுகள் சிைண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.அரசு தரப்பில் வழக்குரைஞா் உஷா வாதாடினாா்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கில் துணிக்கடை ஊழியருக்கு 7 ஆண்டுகள் சிறை

புளியங்குடியில் உறவினா் கொலை வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு ஓராண்டு சிறை

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


